நாடாளுமன்றில் பயங்கரவாத தடைச்சட்ட திருத்த நகலை கிழித்தெறிந்த ரவூப் ஹக்கீம்! (காணொளி)
பயங்கரவாதம் என்பதற்கு இதுவரை வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பயங்கரவாத சட்ட தற்காலிக திருத்தம் தொடா்பாக நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த கருத்தை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
வரைவிலக்கணம் எதுவும் இல்லாத நிலையிலேயே இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்று நாட்டில் அமுல்செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிபபிட்டார்.
இலங்கையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்ற முடியாது.
ஏற்கனவே இந்த திருத்தம் போதுமானதல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ரத்துச்செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்பதை கோரும் கையெழுத்து போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பயங்கரவாத தடைச்சட்டம், ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.டபில்யூ தேவநாயகத்தினால் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயத்தில் நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் சமூக மட்டத்தில் அது பாரிய பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சில வேளைகளில் அரசியல் ரீதியாகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த திருத்தத்தை கொண்டு சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த சட்டம் தொடர்பாக நீதிபதிகள் பலரும் தமது மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டு மக்கள் பலருக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது வெட்கக்கேடானது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
எனவே இந்த திருத்தத்தை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறி, திருத்த நகலை நாடாளுமன்றில் கிழித்தெறிந்தார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
