செங்கோலை ஸ்பரிசம் செய்த அஜித் மன்னப்பெரும எம்.பிக்கு தடை : ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு இன்று முதல் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் இவ்வாறு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையானது நாடாளுமன்ற ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது என தெரிவித்த சபாநாயகர் நாடாளுமன்ற ஒழுங்கு விதிகளை அனைத்து உறுப்பினர்களும் ஒழுங்காக கடைபிடிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இவ்வாறு செங்கோலை ஸ்பரிசம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்ற போது இடம்பெற்ற முரண்பாட்டு நிலையினால் இவ்வாறு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாய்மூல கேள்விகளுக்கான சந்தர்ப்பத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்