இலங்கையில் நகர்ப்புற சனத்தொகை அதிகரிப்பு
இலங்கையில் நகர்ப்புறங்களில் வாழும் சனத்தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் அண்மையில் முன்னெடுத்த கணக்கெடுப்பு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் நகர்ப்புற சனத்தொகை 44.57 வீதமாக ஆக உயர்வடைந்துள்ளது.
கூடுதல் எண்ணிக்கையில் நகர்ப்புற மக்களைக் கொண்ட மாவட்டம்
கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நகர் புறங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கை 18.2 வீதமாக காணப்பட்டது.
இந்த 10 ஆண்டு கால பகுதியில் நாட்டின் நகர்ப்புற சனத்தொகை 44.57 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கூடுதல் எண்ணிக்கையில் நகர்ப்புற மக்களைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது.
நாட்டில் மிகவும் குறைந்த அளவு நகர் புறங்கள் சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாக முல்லை தீவு மாவட்டம் பதிவாகியுள்ளது.