எரிபொருள் இல்லாததால் ஊர்களில் சிக்கிக்கொண்டுள்ள எம்.பிக்கள்
எரிபொருளை தேடிக்கொள்ளா முடியாத காரணத்தினால், 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வர முடியாது தமது ஊர்களில் சிக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.
பெரும்பாலானோர் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள்

இவர்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலைமை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு நெருக்கமானவர்களில் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் கடந்த தினங்களில் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் சிலர் எரிபொருளை சேமிப்பதற்காக ஒரு முறை மாத்திரமே நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். எரிபொருள் பிரச்சினை காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரே நாடாளுமன்றக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
அத்துடன் நாடாளுமன்ற அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தளவுக்கு குறைந்து காணப்பட்டது.
போக்குரத்து சாதனமாக பலர் தற்போது துவிச்சக்கர வண்டியை பயன்படுத்தினாலும் பாதுகாப்பு காரணமாக தம்மால் துவிச்சக்கர வண்டிகளில் பயணிக்க முடியாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாத எரிபொருள் விலைகள்

எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், தூர இடங்களில் இருந்து ஒரு முறை கொழும்புக்கு வந்து செல்ல 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் செலவாகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு தமது பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.