ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பொதுஜன பெரமுன எம்.பி
பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜயரத்ன ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (20.03.2023) கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது இந்தக் கூட்டத்தில் மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் கலந்து கொண்டுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியுள்ளார்.
குழுக் கூட்டம்
இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலை மற்றும் அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாகிர் மார்க்கர் மற்றும் பலர் இந்தக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
