அர்ச்சுனா இராமநாதன் உரையாற்றிய போது நேரடி ஒளிபரப்பில் செய்யப்பட்ட மாற்றம்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தப்பட்ட தகவல்
இதன்போது “சபாநாயகரால் 2025 மார்ச் 19ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இந்த காட்சிக்ள நேரடியாக ஒளிபரப்பப்பட மாட்டாது” என்ற தகவல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சபாநாயகருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, 2025 மார்ச் 20ஆம் திகதி முதல் 8 நாடாளுமன்ற அமர்வுகளுக்கு இவ்வாறு நேரடி ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam