வடக்கு - கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள்: எதிர் தரப்பை விளாசிய வியாழேந்திரன்(Video)
ஜனாதிபதி கொண்டு வந்த மேம்படுத்தல் திட்டங்கள் வரவேற்கத்தக்கது. இதில் வெற்றி காண வேண்டுமானால் செயற்பாட்டில் காட்ட வேண்டும் என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் மீதான உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டிலே நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கம் விட்ட தவறினால் இந்த நாடு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டது. இதன் நிலையை பார்க்கும் போது இந்நாடு மீண்டு வருவதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகுமென நாங்கள் நினைத்தோம்.
எதுவாக இருந்தாலும் இந்த நாடு விழுந்த நிலையிலிருந்து ஓரளவு எழுந்து நிற்கக்கூடிய சூழல் உருவாகியது. பல வேலைத்திட்டங்கள் மிக மோசமாக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்நாட்டை சிங்கப்பூராக மாற்றவில்லை.
இந்த நாடு ஒரு வளமான நாடு ஆனால் 74 வருடமும் இந்நாட்டில் சரியான பொருளாதார கொள்கை இல்லை. சரியான ஒரு தலைமைத்துவம் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை. ஆகவே பிரச்சினைகளை மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள அரசியல் செய்ய விரும்பவில்லை.
பிரச்சினையை யாரும் கூறலாம் பிரச்சினையை சொல்வதற்கு மக்கள் தலைவர்கள் தேவையில்லை.ஆனால் மக்கள் தலைவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டும். அதற்காகவே மக்கள் தலைவர்களை, மக்கள் தெரிவு செய்கிறார்கள். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய நோக்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கே. இதையே மக்கள் எதிர்பாக்கிறார்கள்.
வரவு செலவு திட்டம் தொடர்பாக ஜனாதிபதியினால் நல்லதொரு திட்டம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. விவசாயத்தை மேம்படுத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி சொல்கின்ற திட்டத்தை அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam