சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் யோசனை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், நாளை நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்பு 2025 பெப்ரவரி 10 அன்று சபாநாயகரால் வெளியிடப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம் முற்பகல் 9:30 மணிக்குக் கூடவுள்ளது.
இதன்போது, உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார். இதேவேளை, யோசனையை பரிசீலிக்க, தொடர்புடைய அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவும் நாளை கூட உள்ளது.
அதிகபட்ச காலக்கெடு
இதற்கிடையில், உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் யோசனை மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும்.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீண்டும் கோரும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்து விடும்.
குறைந்தபட்ச நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அது ஏப்ரல் 11ஆம் திகதி நடத்தப்படும். எனினும், நடைமுறை கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அதிகபட்ச காலக்கெடுவை தேர்தல் ஆணையம் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, தேர்தல் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 30 வரையான காலத்தின் ஒரு திகதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
