பதவி விலகிய பிரதியமைச்சர்! ஏற்க மறுத்த கோட்டாபய - கடிதத்தை கையளித்துவிட்டு திரும்பிய உறுப்பினர்
கூட்டறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்புத்துறை பிரதியமைச்சர் பி.வை.ஜி ரட்ணசேகர தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்படாத நிலையில் தமது அமைச்சினால் எவ்வித பயனும் இல்லை என்று கூறியே தாம் தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்தாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளாதபோதும், தாம் அதனை அவரிடம் கோரிக்கை விடுத்து அதனை கையளித்து விட்டு வந்ததாக ரட்ணசேகர குறிப்பிட்டார்.
அமைச்சு பொறுப்பை வகிக்கும் வகையில் தமது மனநிலை இல்லையென்றும் தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ரட்ணசேகர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த உரையின்போது குறிக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரட்ணசேகர, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பது உட்பட்ட பல விடயங்கள் குறித்து அவரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பிரச்சினைகளுக்கு தீர்வை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக ரட்ணசேகர தெரிவித்தார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam