ரணிலின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்! தினேஸ், மகிந்த யாப்பாவிடம் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவதில் தலையிடுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் விக்ரமசிங்க தெரிவித்ததாக அவர் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அச்சுறுத்துவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குழு ஒன்று, தனது வீட்டை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளதாக விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியதை அடுத்தே அவர் இந்த கருத்துக்களையும் கோரிக்கையையும் விடுத்தார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam