புதிய பிரதி சபாநாயகர் நிலைக்கு அரசாங்க வேட்பாளர் போட்டியிட்டிருந்தால், தோல்வியடைந்திருப்பார்! சுசில் தகவல் (Video)
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பின்போது அரசாங்கம் வேட்பாளர் ஒருவரை அறிவித்திருந்தால், அந்த வேட்பாளருக்கு 95 பேர் மாத்திரமே ஆதரவளித்திருப்பர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளுக்கு 100க்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும்.
இதனை கருத்திற்கொண்டே அரசாங்க கட்சி, எதிர்கட்சியினால் முன்மொழியப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதாக கூறியது என்று சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் நேற்றைய வாக்கெடுப்பின்போது, எதிர்கட்சிகளுக்கு மத்தியில் தொடர்பாடல் பிரச்சினை இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சியினால் முன்மொழியப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு அரசாங்கம் ஆதரவளித்ததன் பின்னரே, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஒரு வேட்பாளரை அறிவித்தது.
எனினும் இறுதியில் நாட்டு மக்கள் மத்தியில், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்து சியம்பலாப்பிட்டியவை பிரதி சபாநாயகராக தெரிவுசெய்துள்ளதாகவே செய்தி சென்றுள்ளதாக சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri