21ஆவது திருத்தத்தின் கீழ் கட்சி மாறுவோர் அமைச்சராக முடியாது, அரச சபை அமைக்கப்படும்
தாம் நாடாளுமன்றில் கொண்டு வந்துள்ள 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று தகவல்களை வெளியிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன இந்த தகவல்களை இன்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.
இந்த திருத்தத்தின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்று முதல் கோரிக்கையாக உள்ளது. நாட்டில்,பொருளாதார பற்றாக்குறைக்கு மத்தியில் அரசியல் பிரச்சினை இருப்பதன் காரணமாகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நீதியமைச்சர் அலி சாப்ரி கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பால் ஜனாதிபதிக்கு அதிகாரங்களை அளிக்கும் 20ஆவது திருத்தத்தை தோல்வியடைந்துள்ளது
எனவே நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படவேண்டும். நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்ட கட்சியின் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார்.
25 பேரே அமைச்சர்களாக இருப்பார்கள். கட்சி மாறும் அரசியல் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக முடியாது.
இதனை ஆட்சேபித்து எவரும் உயர்நீதிமன்றம் சென்றால், அந்த வழக்கு ஒரு மாதத்துக்குள் நிறைவுறுத்தப்படவேண்டும் பாதுகாப்பு சபையில் யார் அங்கம் வகிக்கவேண்டும் என்பது வரையறுக்கப்படவேண்டும்
அதேநேரம் அரசசபை ஒன்று அமைக்கப்பட்டு அந்த சபை, அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைக்கும் என்றும் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.



