இரண்டாவது நாளாக கூடும் நாடாளுமன்றம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் (22) நடைபெறவுள்ளது.
நேற்றைய முதல் நாள் விவாதத்தின் தொடர்ச்சியாக இன்றைய நாள் விவாதம் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை நாடாளுமன்றம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு விவாதம்
நாளை 23 ஆம் திகதி காலை 9.30 முதல் காலை 10 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக முழு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri