வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இராணுவ படையினருக்கு அபகீர்த்தி
நாட்டின் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவ்வாறான 65 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மற்றுமொரு குழு சிறைச்சாலைகளுக்குள் இருந்து குற்றச்செயல்களை வழி நடத்தி வருவதாகவும் அவ்வாறான குற்றவாளிகளை ஒரு இடத்தில் தடுத்து வைத்து உள்ளே இருந்து குற்றச்செயல்கள் மேற்கொள்ள முடியாத வகையில் கட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எமது இராணுவம் மரியாதையான முறையில் கௌரவமாக தங்களது பணியை மேற்கொள்கின்றனர்.
எனினும் இலட்சக்கணக்கான இராணுவ படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சிலர் சேவையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்காக புதிய கட்டமைப்பு
ஒரே இராணுவ முகாமில் இருந்து சுமார் 73, ரீ-56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களின் கைகளுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட 73 துப்பாக்கிகளில் 38 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 35 துப்பாக்கிகள் பாதாள உலக குழுக்களிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில குற்றவாளிகள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு பேணியமை தெரிய வந்துள்ளது.
எனவே, பொலிஸ் திணைக்களத்திற்காக புதிய கட்டமைபொன்று உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan