பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம் நாடாளுமன்றம்: அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lanka Parliament Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lankan Peoples
By Shan Jul 08, 2022 10:57 PM GMT
Report

நாட்டின் சொத்துக்களை ராஜபக்சவினர் கொள்ளையடித்தது போன்று எதிரணியில் இருக்கின்றவர்களும் தங்களது ஆட்சி காலத்தில் கொள்ளையடித்தும் சூறையாடியும் உள்ளனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலி முகத்திடல் கோட்டா கோகம போராட்டத்தின் மூன்றாம் மாத நிறைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிராந்திய ரீதியிலான போராட்ட அமைப்பினர் கொழும்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதன் ஓர் அங்கமாக பௌத்த பிக்குகளில் ஒரு தொகுதியினர் சிங்கள பௌத்த முகத்தோடு பல் சமய முகமூடியோடு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிவிட்டனர்.

பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம் நாடாளுமன்றம்: அருட்தந்தை மா.சத்திவேல் | Parliament Place To Protect Economic Protest

இதன் முடிவில் வெற்றி இளைஞர்களுக்கா? சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கா? நிகழப்போவது இன்னும் ஒரு அரசியல் சங்கீத கதிரை காட்சி அரசியல் நிகழ்வாகவும் அமையலாம்.

பொருளாதார நெருக்கடிக்கு காரணம்

தமிழர்களை பொறுத்த வரையில் நாடாளுமன்ற ஆட்சியின் கீழும், நிறைவேற்ற அதிகாரம் கொண்ட 42 வருட கால ஜனாதிபதி ஆட்சியின் கீழும் கிடைத்தது ஒன்றுமில்லை.

நாட்டில் நிகழ்ந்துள்ள பொருளாதார நிலைமைக்கு ராஜபக்சக்கள் மட்டும் காரணம் அல்ல. சுதந்திர இலங்கையில் ஆட்சியில் அமர்ந்தவர்களும் எதிர் அணியில் இருந்தவர்களும் மட்டுமல்ல அமைச்சுக்களை கட்சிகளின் கொட்டகைகளாக்கி பொறுப்புக்களை வகித்தவர்களும், கட்சித் தலைவர்களால் தமக்கு கொடி பிடித்து ஆதரவு தெரிவித்தவர்களை அரசுப் பணிகளில் அமர்த்தி மகிழ்ந்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம் நாடாளுமன்றம்: அருட்தந்தை மா.சத்திவேல் | Parliament Place To Protect Economic Protest

ராஜபக்சவினரும் அவர்களின் கூட்டாளிகளும் ஆட்சி கதிரையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கான செயற்பாட்டில் இறங்கும் எதிர்கட்சியினர் தாம் குற்றமற்றவர்கள் எனக் கூறுவதற்கோ அதற்கு நியாயம் கற்பிப்பதற்கோ எந்த வகையிலும் தகுதியானவர்கள் அல்ல.

தற்போதைய நிலைக்கு அனைவரும் கூட்டு பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் சொத்துக்களை ராஜபக்சவினர் கொள்ளையடித்தது போன்று எதிரணியில் இருக்கின்றவர்களும் தங்களது ஆட்சி காலத்தில் கொள்ளையடித்தும் சூறையாடியும் உள்ளனர். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் ராஜபக்ச "பலருடைய கோவைகள் என்னிடம் இருக்கின்றன"என பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம்

அண்மையில் அனுரகுமார திசாநாயக்கவும் ராஜபக்சக்களின் கோவைகளையும் இன்னும் பல கோவைகளையும் ஊடகங்களில் காட்டிக் கொண்டிருந்தார். அரசியல் குற்றவாளிகள், பொருளாதார கொலையாளிகள் என்போரை பாதுகாக்கும் ஒரு இடமாகவே நாடாளுமன்றம் செயல்பட்டு வருகின்றது என்பது மக்களின் குற்றச்சாட்டு.

இதற்கு மத்தியில் தான் ராஜபக்சவினரை முற்றிலும் அகற்றிய சர்வ கட்சி அரசு உருவாக்க வேண்டும் எனும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான ஒன்றுக்கே தற்போதைய போராட்டம்.

பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம் நாடாளுமன்றம்: அருட்தந்தை மா.சத்திவேல் | Parliament Place To Protect Economic Protest

ஆனால் அது நிறைவான ஒன்றல்ல. நாட்டில் கடந்த 74 ஆண்டு காலமாக சிங்கள பௌத்த பேரின வாத சிந்தனையாளர்களால், அரசியல் கட்சிகளால் பதவி மோகம் கொண்டு நிகழ்த்தப்பட்ட அரசியல் கருத்தியல் கொலைகளும், அபிவிருத்தி கொலையும், பொருளாதார கொலையும், தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட போரியல் ரீதியிலான கொலையுமே தற்போது நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளதோடு உலக நாடுகளிடம் கையேந்தவும் வைத்துள்ளது. நாட்டின் அடிமட்ட மக்கள் அன்றாடம் வீதியிலே வரிசையிலே நிற்கின்றனர்.பலர் மரிக்கின்றனர்.

இதற்கு சிங்கள பௌத்த பேரினவாதம் பொறுப்பேற்க வேண்டும். தற்போது நாட்டுக்கு தேவை பொருளாதார அபிவிருத்தி ரீதியிலான நீதி மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கின்ற கொடுமைகளுக்கான நீதி கட்டமைப்புகளும் உருவாக்கப்படல் வேண்டும். அதிலே தான் நாட்டினுடைய எதிர்காலம் தங்கி இருக்கின்றது.

ஆட்சி கதிரையில் மாற்றத்தை நோக்கிய செயற்பாடு

ஆனால் தற்போதைய போராட்டம் அதற்கான சூழலை உருவாக்கவில்லை. வெறுமனே ஆட்சிக் கதிரையில் மாற்றத்தை நோக்கிய செயற்பாடாகவே உள்ளது. இவ்வாறான செயற்பாடு வெற்றிகளை தந்தாலும் நீண்ட கால மக்கள் நலனுக்கோ, அனைத்து இனத்தவரின் அரசியல் எதிர்காலத்திற்கோ அது உகந்ததாக அமையாது.

பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம் நாடாளுமன்றம்: அருட்தந்தை மா.சத்திவேல் | Parliament Place To Protect Economic Protest

காலிமுகத்திடல் போராட்டம் நபர்களை அகற்றுவதில், துரத்துவதில் தங்கி இருக்குமாயின் அது தோல்வி என்று உணர வேண்டும். நாட்டின் நலன் கருதும் வடகிழக்கு மக்களையும் உள்ளடக்கிய அரசியல் இதய சுத்தியுள்ளவர்களை உள்ளடக்கியவர்களால் முன்வைக்கப்படும் இனங்களின் அடையாளமும், தனித்துவம், பாதுகாக்கப்படும் மைய அரசியல் நீரோட்டத்தை உருவாக்குவதற்கான அரசில் செயற்பாட்டு திட்டமே நாட்டின் அனைத்து மக்களின் வெற்றியை உறுதி செய்யும். ஆனால் தற்போதைய போராட்டத்தின் முகம் அத்தகையாய் இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

தற்போதைய தேவை கோட்டா கோ கம என்பதல்ல. இனவாத, மதவாத கருத்தியல் கொண்டவர்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்பதாகும். இக் கோசம் எழும் நாளே நாட்டின் வெற்றி நாளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US