ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறியுள்ள அருட்சகோதரிகள்
நாட்டில் மீண்டுமொரு மே 9 உருவாகிவிடக்கூடாது என தெரிவித்து ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் அருட்சகோதரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு வேலிகளுக்கு முன்பான அருட்சகோதரிகள் போராட்டத்தினை அமைதியான முறையில் வழிநடத்தி வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காலிமுகத்திடல் நோக்கி மக்கள் படையெடுத்துள்ளதுடன்,பொலிஸார் ஊரடங்கு உத்தரவினை காரணம் காட்டி பொதுமக்களை இடைமறித்துள்ளமையினால் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தலைநகரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தினை தடுக்கும் வகையில், கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்கள் பெருமளவிலானோர் போராட்டக்களத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.