அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள கிரிக்கெட் பிரபலம்
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ரொஷான் மஹாநாம, சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
"எமது சொந்த வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வன்முறையற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் இன மற்றும் மத வேறுபாடுகளின்றி நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
I would like to request all Sri Lankans, irrespective of their ethnic and religious divisions to join the non violent protests planned for the 9th of July for the sake of our own survival and for the sake of the future generations. pic.twitter.com/Aveqb7yZif
— Roshan Mahanama (@Rosh_Maha) July 8, 2022
அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு
ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக இது இருக்கலாம். "நான் என் வாழ்நாளில் 2/3 வாழ்ந்துவிட்டேன், இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த இடத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன்.எனவே, நான் போராட்டங்களில் கலந்துகொள்வேன், ”என்று கிரிக்கட் வீரர் கூறியுள்ளார்.
However, I would like to humbly request all involved to ensure that we are disciplined and maintain the protests in a non violent manner. Let us unite for change and a better future!
— Roshan Mahanama (@Rosh_Maha) July 8, 2022
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக பதவி விலகுமாறு முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாம் ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டு மக்களைக் காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள் உங்களை அல்ல. நான் முன்பு சொன்னது போல் இந்த நாட்டு மக்களை மீண்டும் சோதித்து பார்க்காதே,நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்! #GoHomeGota now” என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.