ஊரடங்கு உத்தரவு சட்டத்திற்கு முரணானது! வெளியானது முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்,ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு ஊரடங்கு உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனவும் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன்
இலங்கை சட்டத்தில்“பொலிஸ் ஊரடங்கு” என்று எதுவுமே கிடையாது.கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத அறிவிப்பு என நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.