கஞ்சா ஏற்றுமதி குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்
கஞ்சாவை ஏற்றுமதி செய்வது குறித்த அவை ஒத்தி வைப்பு பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிடுவதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென இந்த அவை ஒத்தி வைப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்பொழுது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளவருமான டயனா கமகே (Diana Gamage) இந்த பிரேரணையை முன்மொழிந்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார (Santa Bandara) இந்த பிரேரணை வழிமொழிந்துள்ளார்.
உலகின் சில நாடுகளில் கஞ்சா செய்கையின் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்படுவதாக டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்ட மூலத்திற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக அவையில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam