நாடாளுமன்றம் கலைக்கப்படும் : ஜனாதிபதி அநுர தரப்பில் இருந்து வெளியான செய்தி
கூடிய விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய அமைச்சரவை தொடர்பிலும் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “ இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அரசியல் உறுதிப்பாடு
இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இந்த நாட்டு மக்கள் காண மாட்டார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”
அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |