வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதேவேளை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பதவி விலகல்கள்
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதன்படி, இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஆளுநர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகிய பிரதமர்
இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன தான் பதவி விலகலை இன்று காலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்க தரப்பின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |