நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சம்பிக ரணவகவின் தலைமையிலான 43ம் படையணி சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஜனாதிபதி பதவியில் இருந்து பதவி விலக செய்யவில்லை என்று தற்போதைக்குத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் அனைத்து செயற்பாடுகளும் சட்டத்துக்கும் பொதுமக்களுக்கும் பொறுப்புக் கூறுவதாக அமைய வேண்டும்.
அதே நேரம் ரணில் விக்ரமசிங்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். அது குறித்து கலந்தாலோசிக்க நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும் சம்பிக ரணவக கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஆயுதம் தாங்கிய படையினருக்கு பதில் ஜனாதிபதியாக ரணில் சற்றுமுன் விடுத்துள்ள உத்தரவு
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில்! கவலையளிப்பதாக சஜித் அறிவிப்பு