வேலன் சுவாமிகளை களங்கப்படுத்தியமைக்கு வன்மையாக கண்டிக்கின்றோம்
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வேலன் சுவாமிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அவரை வார்த்தைகள் மூலம் களங்கப்படுத்தியமைக்கு கட்சி என்ற ரீதியில் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (07.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
“வந்தாரை வரவேற்கும் பாரம்பரிய பண்பு மட்டக்களப்பு மண்ணிற்கு உண்டு என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனினும் சமீபத்தில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட சிறிய முரண்பாட்டின் போது வேலன் சுவாமிகள் மீது பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகள் பிரதேச வாதத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.
அதனை கட்சி என்ற ரீதியில் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் மன்னிப்பு கோருகிறோம்”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |