நாடாளுமன்றத்தில் சலசலப்பு.. நளிந்த - தயாசிறி இடையே கடும் வாக்குவாதம்
தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்று வருகின்றது.
கல்கிஸ்ஸ மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி, அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு வழங்கிய தீர்ப்பை முன்கொண்டே அவரை இடமாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
வாத பிரதிவாதங்கள்..
குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிய பிரதியமைச்சர் சுனில் வட்டகல இது தொடர்பான விரிவான காரணங்களை குறிப்பிட்டு இவை பொய்யான கருத்து என வாதிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிலையியல் கட்டளையில் குறுக்கே பேசிய போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் தயாசிறிக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கியவருக்கு சபையை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலைமை உருவாகிய நிலையில் பின்னர் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது.



