மொட்டு கட்சியால் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையான எச்சரிக்கை
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையாக எச்சரித்துள்ளதாக பொதுஜன பெரமுன ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி பொறுப்பற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை ஊடகங்களில், பொது கூட்டங்களில் தெரிவித்து வருகிறார்.
அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுர குமாரதிசாநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
நாமல் ராஜபக்ச எதிர்காலத்தில் இலங்கையின் அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இலங்கையின் 'அதிகார பூர்வமற்ற ஜனாதிபதியாக' செயல்படுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாகக் கூறியதை அடுத்து, மொட்டு கட்சி கடுமையாக கேலிக்குள்ளாக்கப்பட்டது.
இதையடுத்தே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



