மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு வரும் நாடாளுமன்ற மைதானம்
நாடாளுமன்ற மைதானத்தை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்க நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை முடிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(09.09.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் நேற்றையதினம் கூடிய நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் நாடாளுமன்ற மைதானத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் பூர்வாங்க இணக்கத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
சிறந்த முடிவு
மேலும், பஹல்வெல சந்துன், உயன பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்குவதற்கான பூர்வாங்க இணக்கம் நேற்று வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

2012ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மைதானம் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றும், அதை மீண்டும் பொதுமக்களுக்குத் திறப்பது மிகவும் சிறந்த முடிவு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam