இலங்கையில் பலரின் உயிர்களை காப்பாற்ற போராடிய பிரித்தானிய பெண்
கடந்த 5ஆம் திகதி எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையான எமி விக்டோரியா கிப் என்பவர் நாடாளுமன்றத்தில் சிறப்பு அங்கீகாரத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
இந்த அங்கீகாரம் சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அவசர சேவைகள் வரும் வரை பயணிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆறுதல் வழங்கிய அவரது சேவையை பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்களை காப்பாற்ற போராடிய பெண்
விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட அவரது செயல்கள், பேருந்தில் இருந்தவர்களின் உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றின என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலா பிரதி அமைச்சர், “மனித குலத்திற்கு எல்லைகள் இல்லை என்பதை அவரது தன்னலமற்ற செயல் நமக்கு நினைவூட்டுகிறது.
மேலும், கிப்பின் இரக்கமும் தைரியமும் நெருக்கடியான தருணத்தில் உண்மையான மனிதத்துவத்தை வெளிப்படுத்தியது.
இந்த அங்கீகாரம், அசாதாரண சூழ்நிலைகளில் சாதாரண நபர்கள் வழங்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றது. உலகளாவிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் இலங்கையின் பாராட்டையும் பிரதிபலிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
