பெற்றோர் தமது பிள்ளைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை
பெற்றோர் தமது பிள்ளைகளை பொது இடங்களுக்கு அல்லது உல்லாசப் பயணங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்குமாறு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஆலோசகர் தீபால் பெரேரா (Deepal Perera) கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலாக பாடசாலைக் கல்விக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளைகள் மத்தியில் கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 10 சிறுவர்களே கொவிட்டுக்காக சிகிச்சைப் பெறுகின்றனர்.
இந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், தொற்றுக்கள் அதிகரிக்கக்கூடும்.
கோவிட் டெல்டா மாறுபாடு இன்னும் சமூகத்தில் இருப்பதால், மேலும் தொற்று மற்றும் பரவல் ஏற்படும் ஆபத்து இன்னும் உள்ளது.
எனவே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்.
கடந்த 6 மாதங்களாக பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத நிலையில் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் பாடசாலைச் சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானது என்றும் சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஆலோசகர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
