பரசூட் மூலம் குதித்து சாதனை படைத்த இராணுவத் தளபதி
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே வானில் இருந்து பரசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர் பரசூட் மூலம் குதித்து சாதனை புரிந்துள்ள முதலாவது நிகழ்வு இதுவாகும்.
இந்நிலையில் ஊவா குடா ஓயா பரசூட் பயிற்சி மையத்தில் அதற்கான பயிற்சிகளை விகும் லியனகே பெற்றுக் கொண்டதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பரசூட் மூலம் குதித்து சாதனை
இதன்படி மாலைதீவின் இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றுடன் அம்பாறை உகணை விமானப்படை வளாகத்தில் வைத்து அவர் வானில் இருந்து பரசூட் மூலம் குதித்து சாதனை செய்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை இராணுவ வரலாற்றில் பரசூட் சாதனை செய்த முதலாவது ராணுவத் தளபதியாக ஜெனரல் விகும் லியனகே தனது பெயரைப் பதித்துக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |