இந்தியா வழங்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி
இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார சிக்கல் நிலைகளில் இந்திய வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு கொழும்பில் உள்ள மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (23.01.2024) இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆதரவு
இதன்போது புதிய தூதுவருக்கு மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து வழங்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கைக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
