பலாலி விமான நிலையத்தில் துரித அபிவிருத்தி அவசியம்! ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில், விரிவான அபிவிருத்தி அவசியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்றுமுன்தினம் (23.12.2025) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கணிசமான பயன்
"யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் முதற்கட்ட அபிவிருத்தி மட்டும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓடுதளத்தை முழுமையாகச் சீரமைத்தால் மட்டுமே கணிசமான பயன்களைப் பெறமுடியும்.

ஓடுதளத்தை விரிவாக்கினால் 320, 321 விமானங்கள் வந்து இறங்கக்கூடிய நிலைமை உருவாகும். இது வடக்கின் அபிவிருத்தியிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்" என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் இந்தியா இன்னும் ஆழமாக ஆலோசித்து தீர்மானம் எடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri