திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து!
அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (25) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து
அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருகோணமலை நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் மஹிந்தபுர சந்திக்கு அருகில் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது பேருந்தினுள் இருந்த பயணிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவருக்கும் பாரிய உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - ரொஷான்


கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam