பப்புவா நியூ கினியில் தொடர் தாக்குதல் நடத்தும் இளைஞர்கள்: 50இற்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினி (Papua New Guinea) நாட்டின் கிராமமொன்றில் இளைஞர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 50இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் இருந்து இதுவரை 26 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மீட்புப்பணி முடிவடையும் வேளையில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வன்முறை, நிலம் மற்றும் ஏரிகளின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்குகளால் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் (UNHRC) தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.
விசாரணைகள்
அத்துடன், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் 100,000 மக்களுக்கு 20 பொலிஸ் அதிகாரிகளே இருப்பதாக பப்புவா நியூ கினி நாட்டின் கிழக்கு செபிக் மாகாணத்தின் ஆளுநர் அலன் பெர்ட் கூறியுள்ளார்.
தாக்குதல் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலேயே அங்கு விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் வருகை தந்துள்ளனர்.
எனினும், தாக்குதல் நடாத்திய 30 நபர்களை பொலிஸார் ஏற்கனவே அடையாளம் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதல்கள் கத்தி மற்றும் கோடரிகளை உபயோகப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |