55 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள்
55 வருடங்களுக்கு முன் மூழ்கிய எம்.வி.நூங்கா (MV Noongah) என்ற கப்பலின் பகுதிகளை அவுஸ்திரேலியா (Australia) கண்டுபிடித்துள்ளது.
1969ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) துறைமுகத்தில் இருந்து 26 பணியாளர்களுடன் புறப்பட்ட இந்த கப்பல், புயலில் சிக்குண்டு மூழ்கியது.
இதில் இருவர் உயிர்காக்கும் படகின் மூலம் தப்பித்ததோடு ஏனைய மூவர் கடலில் ஒரு பெரிய பலகை ஒன்றை பிடித்திருந்த நிலையில், 12 மணிநேரங்களில் பின் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
பாரிய கடல் தேடுதல்
குறித்த கப்பலில் பயணித்த எஞ்சிய 21 பேரும் கடலில் மூழ்க அதில் ஒருவரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
The wreck of MV Noongah has been identified after being tragically lost at sea 55 years ago.
— CSIRO (@CSIRO) July 25, 2024
We helped identify the wreck as part of a collaborative project with Heritage NSW, The Sydney Project as well as members of the public. https://t.co/MDIB69PUbT pic.twitter.com/Osm4NUAVQR
இந்நிலையில், 55 வருடங்களின் பின் இந்த கப்பலின் பகுதிகள் உள்ள இடம் அவுஸ்திரேலிய அறிவியல் நிறுவனத்தின் (Australia's science agency) உதவியுடன் உயர்தர கடற்பரப்பு வரைபடங்கள் மற்றும் காணொளிகளை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் மூழ்கிய பின் இதுவரை அவுஸ்திரேலியாவின் கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் போன்றன தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான பாரிய கடல் தேடுதல்களில் ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |