தீவிரமடையும் கோவிட் - நாடளாவிய ரீதியில் 77 மணிநேர பயணக்கட்டுப்பாடு
கோவிட் வைரஸ் தொற்று மூன்றாவது அலை மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு உச்ச அளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மூன்றாவது அலையானது மேசாமான விளைவுகளுடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டின் கோவிட் அச்சுறுத்தல் தீவிரமடைவதை கருத்தில் கொண்டு இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையான 77 மணித்தியாலங்களுக்கு நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிகக்ப்படுவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
