மட்டக்களப்பு - பால்மணல்மேடு ஸ்ரீ பாலமுருகன் ஆலய பால்குட பவனி
மட்டக்களப்பு - தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும், சங்காபிஷேகமும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் நேற்றைய தினம் (01) வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
பால்குட பவனி
மஹா கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து கடந்த 12 தினங்களாக ஆலயத்தில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அதன் பூர்த்தியை முன்னிட்டு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி நடைபெற்றது.
பால்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததுடன் பால்குடங்கள் கொண்டு பலமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
விசேட பூஜைகள்
அதனை தொடர்ந்து 1008 சங்களுக்கும், பிரதான கும்பங்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் கொண்டு செல்லப்பட்டு முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது.
சங்காபிசேகத்தினை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.












