யாழில் பனை அபிவிருத்தி சபை ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் நேற்று (06) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர், ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவர்
இதன்போது, “தேசிய மக்கள் சக்தி அரசே தகுதியற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களின் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக விநாயகமூர்த்தி சகாதேவன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this