வடக்கு மாகாண ஆளுநருடன் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்துடன் வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் விசேட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்சபட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள் தொடர்பாக சங்கத்தினர் ஆளுநருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
முக்கியமாக விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் இன்மையும் அது தொடர்பான பொருத்தமான பொறிமுறை இன்மை, வாகன பற்றாக்குறை மற்றும் சாரதிகள் இன்மை, கால்நடை வைத்தியர்களின் இடமாற்ற சபையில் சங்கத்தின் உறுதியான பிரசன்னத்தின் அவசியம் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கும் தீவணங்களின் தரத்தின் உறுதிப்பாடு ஆகியன தொடர்பில் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆராயப்பட்ட விடயங்கள்
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும் கால்நடை வைத்தியர்களும் மாகாணம் முழுதும் நடைமுறைப்படுத்தும் சேவைகள் தொடர்பாகவும் சட்டவிரோத சிகிச்சையாளர்களினால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்ட்டுள்ளது.

மேலும், கால்நடை வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் பற்றாக்குறையாக உள்ள ஏனைய ஊழியர்களின் தேவைப்பாடு தொடர்பாகவும் விளங்கப்படுத்தப்பட்டதுடன் வினைத்திறனான கால்நடை வைத்திய சேவையை வழங்குவதன் மூலம் பண்ணையாளர்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சாதகமாக பதிலளித்த ஆளுநர், உடனடியாக செய்யக் கூடியவற்றை செய்வதாகவும் ஏனையவற்றை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க முனைவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இந்த சந்திப்பில் வடக்குமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் Dr.M.முரளிதாஸ், செயலாளர் Dr.S.சுகிர்தன், உபதலைவர் Dr.S.கிருபானந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan