பலாலி வீதியில் இனி நள்ளிரவு வரை பயணிக்கலாம்! படைத்தரப்பு அறிவிப்பு
யாழ்ப்பாணம், வசாவிளான் சந்தியிலிருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதி வரையான பலாலி வீதி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று படைத்தரப்பு அறிவித்துள்ளது.
படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பலாலி வீதியில், வசாவிளான் காவல் நிலையத்திலிருந்து பலாலிச் சந்தி வரையில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரைக்குமே பொதுமக்கள் பயணிக்க இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.
பொதுமக்களின் போக்குவரத்து
இந்நிலையில், இந்த வீதியானது இன்று(22) ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது என்று படைத்தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்குப் பகுதியில் தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வீதிகள் மாத்திரம் இவ்வாறு பொதுமக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan