பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல் - இளங்குமரன் எம்.பி. வாக்குறுதி

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Aug 01, 2026 11:52 AM GMT
Report

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் நேற்று(31.07.2026) மீண்டும் மூடப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஆண்டு, ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி தற்காலிக பாதையூடாக செல்லும் வகையில் திறக்கப்பட்டது.

மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்

அத்துடன், நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது. எனினும் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்த காரணத்தினால் அந்த வழியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பாதை தற்காலிகமாக திறப்பு

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர், இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடமும் கோரிக்கை விடுத்தனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல் - இளங்குமரன் எம்.பி. வாக்குறுதி | Palali Raja Rajeshwari Amman Temple Road Closed

இது தொடர்பில், இராணுவத்தினருடன் கலந்துரையாடியதையடுத்து, நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.

அதன்பின்னர், ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்டதன் பின்னர், அந்த வீதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம்(30.07.2026) திருவிழா முடிந்த நிலையில் நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.

காணிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கை

இதேவேளை, பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,

“ கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல் - இளங்குமரன் எம்.பி. வாக்குறுதி | Palali Raja Rajeshwari Amman Temple Road Closed

குறித்த பாதையானது நிரந்தரமாக திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.

மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை : என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - வருத்தத்தில் அலி சப்ரி

பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை : என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - வருத்தத்தில் அலி சப்ரி

நீர்கொழும்பு கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய கடற்றொழில் படகு : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

நீர்கொழும்பு கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய கடற்றொழில் படகு : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US