சீனா மற்றும் பாகிஸ்தான் போர் கப்பல்களின் வருகை இலங்கை இராஜதந்திரத்திற்கு கிடைத்த முதல் தோல்வி: துரைரெட்ணம்
இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வியாகும் என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் ஈபி. ஆர். எல். எப் பத்மநாப மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று(12) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு அனிசேரா கொள்கைகளை சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து மேலதிகமான உதவிகளை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.
இலங்கை அரசு
இலங்கை அரசு இனிமேலாவது இராஜதந்திர செயற்பாடுகளில் இந்தியாவை பகைக்காமல் இலங்கை அரசாங்கத்தை செயற்பட வைப்பதற்காக அணிசேரா செயற்பாடுகளும் அணிசேரக்கூடிய செயற்பாடுகளும் ஒரு தத்துவ ரீதியான கொள்கையளவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இலங்கை அரசானது நீண்ட காலமாக உன்னிப்பாக இராஜதந்திர செயற்பாடுகளுடன் செயற்பட்டு வந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தனிநபர் செயற்பாடுகளுக்காக இராஜதந்திர செயற்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறது.
காலிமுகத்திடல் போராட்டம்
கடந்த கால செயற்பாடுகள் இலங்கை அரசை கண்டிக்க கூடியதாக இருக்கின்றது. நாடு எதிர் நோக்குகின்ற அரசியல் ரீதியான விடயங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் அரசியல் தலைமைகள் செயற்படாமல் பின் வாங்கியதால் ஆட்சி மாறக்கூடியளவில் மக்கள் திரண்டு காலிமுகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் சர்வகட்சி ஆட்சிமுறை என கூறிக் கொண்டு குறிப்பிட்ட சில கட்சிகளுக்குள் தங்களது செயற்பாடுகளை முடக்கி வைத்திருப்பது என்பது ஏற்புடையதல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுப்பாடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து மோதல் என்பது அந்த தலைமையின் பலவீனத்தை காட்டுகின்றது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரண்டு பிரதிநிதிகளுக்குள் எழப்படுகின்ற கருத்துக்களை தீர்க்க கூடியவாறு தலைமைகள் ஒரு களத்தை அமைத்து கொடுக்க வேண்டும்.

இதற்கமைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, பிழை என்ற கருத்துக்களை பொதுமக்கள் முன் விவாதிப்பது என்பது அந்த கட்சியின் பலவீனத்தை கொண்டு வரும்.
ஆகவே உடனடியாக தமிழரசு கட்சியும் தமிழ் ஈழ விடுதலை
இயக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் ஏற்படுகின்ற கருத்து
முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு களத்தை சரியாக அமைத்து உள்ளுக்குள் எழுகின்ற
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan