பாகிஸ்தான் ஆதரவு வட்ஸ்எப் குழு: தமிழ் நாட்டில் விசாரணை ஆரம்பம்
பாகிஸ்தான் புகழ்பாடி, 'வட்ஸ்எப்' குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவர்கள் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
விசாரணை
கோவை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள், இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணியர் 26 பேரை, ஏப்ரல் மாதம் 22ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர், 'ஒப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் என்ற இடங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
ஒப்பரேஷன் சிந்தூர்
இதன் போதே, 'ஒப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் புகழ்பாடி, 'வட்ஸ்எப் ' குழுக்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அவர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள, எப்.ஐ., எனப்படும், 'பொப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' தீவிரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam