தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கின்றீர்களா..! வெளியான ஆதங்கம்
வட்டுக்கோட்டை என்பது தொகுதியா? அல்லது பிரதேசமா? வட்டுக்கோட்டையை திட்டமிட்டு நீங்கள் அழிக்கின்றீர்களோ தெரியவில்லை என கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம்(13) நடைபெற்றது.
அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டு அழிக்கப்படுகின்றதா..
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துமாறும், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்றுவரை பொது மலசலம்கூட இல்லை. ஒரு பொலிஸ் நிலையம் மட்டும் உள்ளது.
நீங்கள் திட்டமிட்டு வட்டுக்கோட்டையை அழிக்கின்றீர்களோ தெரியவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
