எகிறும் எரிபொருள் விலை! ஆபத்தாகும் விமான பயணங்கள்
ஈரான் - இஸ்ரேல் யுத்தம் ஏனைய யுத்தங்களை போல் அல்லாமல் எரிபொருள் விலையை அதிகளவில் பாதிக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியா மற்றும் இலங்கை போன்ற பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த யுத்தத்தால் சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா, கட்டார் மற்றும் டுபாய் போன்ற நாடுகளின் வான்பரப்பு செயலிழக்க வாய்ப்புள்ளது.
உலகின் மிக முக்கிய பொருளாதார மையமாக மத்திய கிழக்கு உள்ளது.
எனவே, மத்திய கிழக்கின் வான்பரப்புக்கள் இவ்வாறு மூடப்படுவது உலகின் ஒட்டுமொத்த விமான சேவைகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



