ஆசிய கிண்ண தொடர்: மைதானத்துக்கு வர மறுத்த பாகிஸ்தான் அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று(17.09.2025) ஐக்கிய அரபு இராச்சிய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது.
போட்டி ஆரம்பிக்க சிறிது நேரமே இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி, மைதானத்துக்கு வர மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கெதிரான கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது. அப்போது, இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்து விட்டனர்.
ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் அணி
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்திய அணி இவ்வாறு நடந்துகொண்டதாக அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் பின்னர் விளக்கமளித்திருந்தார்.

எனினும், இந்த விடயம் பாகிஸ்தான் வீரர்களையும் அணி நிர்வாகத்தினரையும் ஏமாற்றமடைய செய்தது.
இதனால், பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர், அணியை மைதானத்துக்கு புறப்படுமாறு கேட்டுக்கொண்டதாகவும் போட்டி ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam