இந்திய அணியை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி
துபாயில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் வெற்றி கொண்டது.
துபாயில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெற்றிகொண்டது.
குறித்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணியின் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணியின் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 26.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன்மூலம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 12 ஆவது ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை பாகிஸ்தான் இளையோர் அணி சுவீகரித்துள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam