ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அவசர ஆலோசனை நடத்திய ஈரான் ஜனாதிபதி
பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடலின் போது, தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும், போர்நிறுத்தத்தின் தற்போதைய நிலை குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்ததாக ஈரான் ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.
பதற்றமான சூழல்
ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக ஆயுதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருவதுடன், தற்போதைய சூழலில் ஈரான் விண்வெளி சார்ந்து ரஷ்யாவின் செயற்கைக்கோள் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்போதைய மோதல்களில் ரஷ்யா இதுவரை நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்மட்ட ஆலோசனையானது வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri