ஈரானுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ள மிக சக்திவாய்ந்த பாரிய விமானம்
ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய வானில் பறக்கும் கட்டளை மையம் ஆகும்.
அதி பாதுகாப்பான அமைப்புக்கள்..
அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது.

ரஷ்யாவின் டூம்ஸ்டே விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.
Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது.
அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம். இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.