சீனாவுடன் இணைந்து பாகிஸ்தானின் இரகசிய நகர்வு: இந்தியாவுடனான முறுகலின் எதிரொலி
பாகிஸ்தான் தனது வான் படை பலத்தை அதிகரிப்பதற்காக சீனாவின் FC-31 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரித்து வருகின்றது.
இந்தியாவுடன் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுட்டள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FC-31 விமானத்துடன் சீனாவின் PL-17 ஆகாய-வான் ஏவுகணைகள் பொறுத்தப்படவுள்ளன.
சீனாவின் ஆயுதங்கள்
இவை, 400 கிலோமீற்றர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகும்.
அத்துடன், சீனாவின் 31 "கைர்பால்கான்" ஸ்டெல்த் போர் விமானங்கள் விரைவில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் விமானப் படையினர் தற்போது சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்ததாக அந்நாட்டு ஆயுதங்களை அதிகமாக பயன்படுத்தும் நாடு பாகிஸ்தான் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



