யுக்ரெய்ன்-ரஸ்ய போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஸ்யா செல்லும் இம்ரான் கான்! உன்னிப்பாக நோக்கும் இந்தியா!
யுக்ரெய்னுக்குள் தமது படைகள் செல்ல ரஸ்ய ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) ரஸ்யாவுக்கு செல்கிறார்.
கடந்த 23 ஆண்டுகளில், பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அரசு முறை பயணமாக ரஸ்யாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
1999-ம் ண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் செரீப் ரஸ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இம்ரான்கானின் ரஸ்ய பயணத்தை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ஜனாதிபதி புடின் விடுத்த அழைப்பின் பேரில் இம்ரான்கான் ரஸ்யாவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பயணத்தின்போது இம்ரான்கான் புடினை நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
யுக்ரைன்- ரஸ்ய படைகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இம்ரான்கானின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை இம்ரான் கானின் ரஸ்ய பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.